எப்படியிருக்கிறான் கிராமத்து விவசாயி?
எப்படியிருக்கிறான் கிராமத்து விவசாயி ?:-
திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் ( இன்னும் எளிதாக சொல்லவேண்டுமானால் சேரன்மகாதேவி செல்லும் வழியில்) பேட்டைக்கு அடுத்து எனது பிறந்த ஊர் / கிராமம் சுத்தமல்லி அமைந்துள்ளது. முற்றிலும் விவசாயத்தினை நம்பியுள்ள கிராமம். பெரும்பாலானவர்கள் அருகிலுள்ள சிறு நகரங்களான டவுன், ஜங்சன், பாளையங்கோட்டை போன்ற இடங்களில் சிறு வேலைகளை செய்து கொண்டும், விவசாயத்தினை பார்த்துக்கொண்டும் வாழ்ந்துவருபவர்கள். அதிகபட்சமாக பெரும்பாலானோர் தினக்கூலிகளாகவும், மாதச் சம்பளம் எனில் அதிக பட்சம் ரூ.5000 முதல் ரூ.7000 வரை வாங்குவார்கள். ( அதுவும் RMKV, POTHYS முதலான துணிக்கடைகளில் நிரந்தரமாக வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும்.) ஆனால் வீட்டு வாடகையைத் தவிர அவர்களும் பெருநகரவாசிகள் போல செலவுகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பவர்களே. உணவகங்கள், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை, பள்ளிக்கட்டணங்களின் பூதாகர வளர்ச்சி, போன்றவற்றை இத்தகைய சிறு வருமானச் சூழ்நிலையையால் எதிர் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். ( திருநெல்வேலியில் வசிக்கும் எனது நண்பர் தனது 1 வது படிக்கும் மகனுக்கு ரூ. 25000 ஆண்டு பள்ளிக்கட்டணமாக கட்டுகிறார், ரசீது இன்றி. மற்ற மறைவுக் கட்டணங்கள் தனி, சமிபத்தில் நான் சாப்பிட்ட ஒரு உணவகத்தில் சரியாக ஒரு கையளவு பிரியாணிக்கு ரூ.90 வசூலிக்கிறார்கள், சென்னை இதற்கு பரவாயில்லை ). இப்படி எந்த விதத்திலும் பெரு நகரங்களுக்கு குறையாத விலைவாசி, ஆனால் வருமானம் அவ்வாறு அல்ல.
இத்தகைய சூழ்நிலையில் விவசாயம் ஒரு ஆபத்பாண்டவன். குறைந்த பட்சம் அரிசியாவது கிடைக்கும். "சாப்பாட்டையாவது கழிக்கலாம்" எனது அம்மா அடிக்கடி சொல்வதுபோல. ஆனால் மாறுபடும் பருவநிலைகள், பொய்க்கும் மழையளவு, உரங்களின் விலையுயர்வு, விவசாய கூலிகளுக்கான ஆட்கள் தட்டுப்பாடு, நெருக்கும் குடும்ப பொருளாதார சூழ்நிலை இவற்றிக்கு இடையில் சிறு விவசாயிகள் தொலைதலும், பெரு விவசாயிகள் கடனாளிகளாக தாக்குப்பிடித்தலும் மட்டுமே நடக்கிறது. இதில் திருநெல்வேலி என்பது ஆற்றுப்பாசனம், கால்வாய் பாசனம் என இரண்டையும் கொண்டது. வற்றாத தாமிரபரணி இருக்கிறது.மணலையெல்லாம் அள்ளி அதையும் வற்ற வைத்து விட்ட கதை வேறு.(இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதுவும் நடக்கும் எனத் தெரியவில்லை). நான் சிறுவனாக இருந்தபொழுது கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு இரண்டு மூடை நெல்லின் விலை ரூ.1600 -1800. தற்போது நல்ல நிலையிலிருப்பின் ரூ.1800 -ரூ 2200. அவ்வளவுதான். மற்ற இதர விலைவாசி உயர்வோடு ஒப்பிடுகையில் இது நியாயமான உயர்வா?!. இல்லவேயில்லை. எங்கள் தாயார் வழியில் இருக்கும் 22 மரக்கா நெல்சாகுபடி நிலத்தில், ஒரு பருவத்திற்கு (6 மாதம் ) ஆனா செலவு, கிட்டத்தட்ட ரூ.31000. ( நாங்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடவில்லை, தெரிந்தவர் ஒருவர் மூலமாக செய்கிறோம்). கிடைத்த மொத்த வருமானம், செலவு நீங்கலாக ரூ.35500. (அதுவும் எல்லாம் சரியாக அமைந்ததால் கிடைத்தது இது, எனது சொந்த ஊரில் ஏற்பட்ட எதிர்பாராத மழைப்பொழிவினால் அங்கு கதை அப்படியே வேறு). சராசரியாக ஒரு மாதத்திற்கு கணக்கிட்டால் ரூ.5916. அவ்வளவுதான்.( இதில் உழைக்கும் அந்த மொத்த விவசாயின் குடும்பத்தினருக்கான கூலி என்பது கிடையாது. அவர்களது சொந்த மனிதவளத்திற்கு கொஞ்சம் கழித்தால் ஒன்றும் மிஞ்சாது ) ரூ. 6000 யிரத்தில் ஒரு விவசாயி தனது குடும்பத்துடன் என்ன செய்து விட முடியும். தனது சந்ததியை இந்த சூழ்நிலையிலிருந்து வேறு சூழ்நிலைக்கு மாற்றக்கூட இயலாத தற்கொலை வாழ்வில்தான் விவசாயி இருக்கிறான். சோத்துக்கே லொண்டா என்கையில், நல்ல கல்விக்கு, ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு எங்கே போவது. இது கொஞ்சம் பெரிய விவசாயிகளின் நிலை. சிறு விவசாயியைப் பற்றி சொல்லவே வேண்டாம். தென்மாநிலங்கள் கொஞ்சம் வளமுற்றவை. இங்கேயே நிலைமை இப்படி.வடமாநிலங்கள் வறண்ட பூமிகள், கல்வியறிவு மிகக்குறைவு, அரசியல்வாதிகளின் ஆளுமைத்தனம் அதிகம், அப்படியெனில் அங்குள்ள விவசாயி என்ன ஆவான்?.
நாம் இங்கு கார்களை ஒட்டி, கரன்சியை நீட்டி, ஆலைகளைப் பெருக்கி இந்தியா வாழ்கிறது என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு ஓசோனில் ஓட்டையைப் பெரிதாக ஆக்கி விவாசயத்தினை நேரடியாகவும், மறைமுகமாகவும் கெடுக்கிறோமே ஒழிய, ஒன்றையும் கிழிப்பதில்லை. (அரிசி எதிரிலிருந்து கிடைக்கிறது செடியிலா, கொடியிலா என்று குயிஸ் நடக்கிறது இங்கு ஒரு தொலைக்காட்சியில்.)
ரியல் எஸ்டேட் வேட்டையர்கள், சிட்பண்ட் முதலாளிகள் என இந்த கும்பல் வேறு, விவசாயிடம் இருக்கும் கொஞ்ச, நஞ்ச கோமணத்தையும் ஆசை காட்டி உருவப் பார்க்கிறார்கள். ஆக இந்த மண்ணின் மைந்தர்கள், கொஞ்சம் கொஞ்சமாக அதிகார வர்க்கத்தின் ஆசைகளுக்கும், அரசியல்வாதிகளின் அபிலாசைகளுக்கும் தங்கள் பூமியில் தங்களையே புதைத்துக் கொல்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச வருடங்களில் பசிக்காமல் இருக்க நாமெல்லாம் எதாவது யோகா கற்றுக்கொள்ளவேண்டி வரும். அதுவரைக்கும் மாற்றி மாற்றி முத்தங்கள் கொடுத்துக்கொண்டு ஆடுவோம்!!!

Comments
Post a Comment