இண்டர்ஸ்டெல்லரும் இனிய தமிழ் ரசிகனும் - விமர்சனம்!!:-

interstellar குறித்து நிறைய கருத்துக்கள், விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தது, மற்றொருபக்கம் வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைக்கவே இல்லை. நண்பர் ஒருவர் christopher nolan ஐ மதிக்கும் விதமாக இந்த படத்தை தியேட்டரில் பார்க்க போவதாகச் சொல்லவும், ஆர்வம் அதிகரித்து நேற்று சத்யம் திரையரங்கில் பார்த்தோம்.
படம் குறித்து நிறைய பேர் படம் செமையா இருக்கு ஆனா கொஞ்சம் புரிய மாட்டேங்குது என்று வேறு அலுத்துக்கொண்டார்கள். இந்த மாதிரி sci-fic படங்களை பார்ப்பதற்கு முன்பு நான் சில வேலைகளை செய்துகொள்வேன். முதலில் அந்த படம் குறித்த கதையை, சில தகவல்களை இணையம் மூலமாகவும் மற்ற சாத்தியமான வழிகளின் மூலமாகவும் தெரிந்து கொஞ்சம் புரிந்து கொண்டு படத்தினை பார்க்க செல்வது. படத்தினை பற்றிய அந்த pre collected knowledge படத்தினை ரசித்துப் பார்க்க உதவியாக இருக்கும். இதென்ன விஜய் படமா இல்லை இயக்குனர் ஹரி படமா? எளிதாக பார்த்து புரிந்து கொல்ல.. sorry.. கொள்ள!! (அவர்கள் படமே என்ன சொல்ல வராங்கன்னு பல நேரம் குழப்பமா இருக்கும் என்பது வேறு)
Interstellar படத்தினை புரிந்து கொள்ள ஒரு குறைந்த பட்ச இயற்பியல் (Physics) அறிவும், கொஞ்சம் வான் இயற்பியல்/ வானவியல் (Astrophysics / astronomy) அறிவும் வேண்டுமென நான் கருதுகிறேன். இந்த +2 ல physics படிக்காதவங்களுக்கு இந்தப்படம் எவ்ளோ புரியும்னு தெரியல.( படிச்சவங்க பாதி பேருக்கே முழுசா புரியலைங்கிறது வேறு!!)
தூசிப்புயலால பூமி கொஞ்சம் கொஞ்சமா மனுசங்க வாழ முடியாத இடமா மாறிகிட்டு வருது. விவசாயம் பண்ண முடியல. சோளக்காடு அழியுது. அங்க விவசாயம் பண்ணுற நாசா விஞ்ஞானிதான் நம்ம ஹீரோ.வில்லேஜ் விஞ்ஞானி!! (நம்ம ஆட்கள் மாதிரித்தான் christopher nolan ம் யோசிச்சிருக்கார்!!).
ஹீரோவோட பொண்ணு தன்னோட ரூம்ல ஏதோ பிசாசு இருக்கிறதா சொல்லிக்கிட்டே இருக்கா. ஹீரோ பிசாசெல்லாம் கிடையாது, அறிவியல் படி அது என்னன்னு கண்டுபிடின்னு சொல்லுறாரு. திடீர்ன்னு ஹீரோவே அந்த பிசாசு என்ன சொல்லவருதுன்னு கண்டுபிடிச்சி அது காட்டுற இடத்துக்கு போறார்.!! ( இங்கதான் இந்த இயற்பியல் அறிவு தேவை, binary pattern, coded message, gravitational wave அப்படீங்கிற அந்த பிசாசு communication a புரிஞ்சுக்க..+2ல physics ஒழுங்க படிக்காதவங்கெல்லாம் இந்த சீனுல மண்டைய சொரிஞ்சிட்டு தியேட்டர்ல பாப்கார்ன் வாங்கப் போய்டுவாங்க) அங்க மேலும் சில நாசா விஞ்ஞானிகளான சிலரையும், பழைய பேராசிரியர் brand ஐயும் சந்திக்கிறார். அவர்களுடைய பூலோக மனிதர்களை காப்பத்துற mission பத்தி தெரிஞ்சுகிட்டு அந்த மிசனுக்கு மூவர் டீமோட நம்ம மக்களை காப்பாத்த தன் குடும்பத்தை விட்டு, உயிரைப் பணயம் வச்சி போறார் நம்ம விமானி ஹீரோ. ( இந்த இடத்துல, நம்ம ஊரு படம்னா, "யார் பெத்த மகனோ" அப்படீன்னு ஒரு emotional, sentimental பாட்டப் போட்டு பீலிங்க்ஸ் காட்டி இருப்பானுக).
சனி கிரகத்தோட சுற்றுவட்டப்பாதையில இருக்கிற wormhole (புழுப்பொந்து)
வழியா பயணிச்சு திரும்பி வந்தா எல்லாரையும் காப்பாத்திடலாம். அது தான் ஒரே option.!!!endurance ங்கிற சோதனை விண் ஓடத்துல நம்ம ஹீரோ கூப்பர், professor brand ஓட பொண்ணு அமிலியா, இயற்பியலார் ரோமிலி, புவியியலாளர் டோயலே மற்றும் இரண்டு ரோபோக்கள் (case and tars) ஆகியோருடன் பயணத்தை தொடங்குகிறார். ஏற்கெனவே சில பல விஞ்ஞானிகள் அந்த "பொந்து" வழியா பயணம் செஞ்சு புவிவாசிகள் வாழத் தோதானதா சில கிரகங்கள கண்டுபுடிச்சி தகவல்கள் கொடுத்திருக்காங்க. ஹீரோ தன குழுவோட திரும்பியும் பொந்து வழியா பயணப்பட்டு தேவையான மீதித் தகவல்கள அனுப்பீட்டா, பூலோகவாசிகள் நாசா மூலமா வேறு கிரகங்களுக்குப் போய் அதை மாசுபடுத்த ஆரம்பிச்சுடலாம்!!. ஹீரோ குழுவோட பிராயாணம் என்ன ஆச்சு, வெற்றியா தோல்வியா, தேவையான தகவல்கள அனுப்ப என்ன கஷ்டமெல்லாம் பட்டாங்க. அப்படீங்கிறதுதான் மீதிப்படம்.
இதுல அங்கங்க மானே, தேனே மாதிரி கருப்பு பொந்து (black hole),time difference, gravitation concepts, space station, quantum mechanics, event horizon, extra dimensional space இரெண்டடி ஆழக் கடல், அதில் வரும் சுனாமி, அப்படீன்னு ஏகப்பட்ட physics, astronomy விஷயங்கள கலந்து கட்டி அடிச்சிருக்காரு நம்ம Christopher Nolan.
மொத்தத்துல ஒரு hi fi- sci fi படம். கன்னாபின்னான்னு உழைப்பு இந்த படத்துக்கு தேவைப்பட்டிருக்கும். இதுல இடையில அந்த ரோபாட் மூலமா கொஞ்சம் காமெடி, ஹீரோக்கும் அவரு பொண்ணுக்குமான emotion அப்படீன்னு ஹாலிவுட் standard மேட்டர் எல்லாம் இருக்கு. மொத்த பட்ஜெட் 165 மில்லியன் டாலர்ஸ்.
கொஞ்ச நாள் கழிச்சி தமிழ்ல முருகதாஸ், இல்ல ஷங்கரோ சந்திரன், கடப்பாரை அப்படீன்னு இதே கதையை தழுவி, முத்தங்கொடுத்து ஒரு படம் எடுப்பாங்க. அப்போ நம்ம ரசனைக்கு ஏத்தமாதிரி நாலு சாங், விண்வெளியில ரெண்டு பைட் அப்புறம் ஹீரோயின் கிளாமரா குட்டப் பாவாடையோட விண்வெளியில நடக்குறது, கட்டிபுடிச்சி ஆடுறது எல்லாம் பாக்கலாம்.
மண்டையுள்ள பயபுள்ளைகளுக்குதான் இந்தப்படம். மத்தவங்களுக்கு நம்ம ஆட்கள் கொஞ்ச நாள் கழிச்சு எடுப்பாய்ங்க. அப்போ interest ஓட பாக்கலாம்.
அதுவரைக்கும் கத்தி குத்து வாங்கி கலாய்ச்சு மகிழுவோம்.
interstellar நம்ம தமிழ் கலா ரசிகர்களுக்கு interstae இல்லாத படந்தான்.

Comments
Post a Comment