கவிஞனாயிருத்தல்

கவிஞனாயிருத்தல்:-


காரத்துக்குப்பின்
அருந்தும் வெந்நீராய்
உன்நினைவு
உதைத்ததில்
உதித்ததது

படியேறி செல்கையில்
கலைந்தததை
பக்குவமாய்
இறுக்கிக் கொண்டேன்
இருந்தும் நழுவியது
கொஞ்சம் நினைவிலிருந்து

வானின் மின்னல் போல்
அடுத்தது வரினும்
முன்னதை காண்பது
முடியாத சத்தியம்
முயலமுடியா சாத்தியம்

கொஞ்சம் இசை கேட்பின்
விட்டதைப் பிடிக்கலாம்
என கேட்க்கையில்
தொட்டதும் தொலைந்து
தொடர்பில்லாதவொன்று தோன்றியது

இடையில் கடித்த
எறும்பின் இன்னல்
எடுத்துக்கொண்டு போய்விட்டது
முழுதும்
எண்ணாக் கவிதையை
எழுதாக் கவிதையை
எங்கேயோ

கவிஞனாயிருத்தல் கடுத்தம்!!.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔