செப்புச் சமையல்
நெகிழிக் குடுவையில்
காரட் பொறியல்
வைக்கத் தெரியுமா உங்களுக்கு?
தட்டில் சோறும்
சிறு டம்ளரில்
குழம்பும் வைக்கத் தெரியுமா?
ஐந்தாறு நொடிகளில்
தேநீரும், குளம்பியும்
ஆத்தித் தரத் தெரியாது
ஆளுயர உங்களுக்கு
எதிர்பாராது
எப்போதாவது
ருசியாக சமைத்து
வயிறு நிரம்பச் செய்யும்
வக்கனை சமையல்தான்
ஆகப் பெரிதாகத்
தெரியும் உங்களுக்கு
நாவில் சுவைக்காது
வயிறு நிரம்பாது
செப்புச் சாமான்களில்
மனம் நிறைய சமைத்து
தினம் நிறைய உண்பிக்க
மழலை அவளுக்கு மட்டுந்தான்
இம்மண்ணுலகில்.
என்றும் தெரியும்.
Comments
Post a Comment