மாற்றம் எங்கு தேவை?

மாற்றம் எங்கு தேவை? :-



நிகழ்வு 1.
                     கடந்த ஒரு வருடங்களாக எனது வருங்கால வைப்பு நிதியினை பெற குர்கான்- ல் உள்ள அரசு வைப்பு நிதி அலுவலகத்துடன் (Govt. PF Office) ஒரு தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 10 வருடங்களாக சேமித்து வைத்த நிதியை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றும் பொழுது (Transfer from one company to another while changing ) ஏற்பட்ட குளறுபடியால் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது குர்கான் வைப்பு நிதி அலுவலகம். நான் விலகிய நிறுவனம் 2007 ல் அனுப்பிய காசோலையை எனது புதிய நிறுவனத்தின் வைப்பு நிதி கணக்கில் சேர்க்கவில்லை இன்றுவரை. அதற்க்கு சரியான காரணமும் தெரிவிக்க மறுக்கிறார்கள். ஒருவருடமாக தொடர்ந்து வருகிறேன் நிழல்போல. " என்னது கையப்புடிச்சு இழுத்தயா" கதைதான். "அண்ணன் எப்போ வர, திண்ணை எப்போ காலியாக" என்கிற பழமொழி மாதிரித்தான் இந்தக் கதை ஓடி கொண்டிருக்கிறது.

நிகழ்வு 2.
                      கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்க்கு தமிழ்ல இப்படிதான் வருது இணையத்தில் மக்கா) அலுவலகத்துக்கு புதுப்பித்தலுக்காகப் போயிருந்தேன். இணையத்தில் அனுமதிபெற்ற சந்திப்பை( appointment) உறுதி செய்து, தேவையான சான்றிதல்களையும், தனிநபர் சான்று, முகவரிச் சான்று ( ID Proof. Address Proof ) முதலானவற்றையும் எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே சென்ற பிறகு சிலவற்றை நகல் எடுக்கச் சொன்னார்கள். இணையத்தில் குறிப்பிட்டபடி இல்லை. உள்ளேயிருந்த நகல் எடுக்கும் இயந்திரமும் வேலை செய்யவில்லை. வந்திருந்த எல்லோரும் நகல் எடுக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். இணையதளத்தில் ஆங்கில, ஹிந்தி மொழிகளைத் தவிர ஏனைய மொழிகளின் பயன்பாடு இல்லையாதலால் எத்துணை பெயரால் தகவல்களை புரிந்துகொள்ள முடியும் என்பது கேள்விக்குறி. ( ஒழுங்க தெரிஞ்சிகிட்டு போறவங்களையே, அத கொண்டுவாங்க, இது செல்லாது, என்று அலைகளிக்கையில், மொழி ஒரு பெரிய பிரச்சினையா என்ன, தகவல் மையத்திற்கு தொடர்பு கொண்டால், அவங்க பேசுற தமிழுக்கு, நாமே தெரியாத ஆங்கிலத்தையே தெரிஞ்சுக்கலாம், Be Careful, என்னச் சொன்னேன் ). இதில் கிட்டத்தட்ட 75% வேலையை டாடா குழுமம் செய்கிறது. இல்லேன்னா கிழி, கிழி, கிழிதான். ( பாரின் போறது கூட ஈஸி போல, நம்ம ஊர்ல பாஸ்போர்ட் வாங்கிறதுக்குள்ள டிரவுசர் அவுந்துடுது )

                  எனது அனுபவம் இப்படி. எல்லோருக்கும் இப்படி ஏதாவது ஓன்று இருந்து கொண்டே இருக்கும், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுத் தீர்வை, நிலத் தீர்வை, மின்சாரக் கட்டணம் இப்படி ஏதாவது ஒன்றுக்காக அரசு அலுவலகங்களை நாம் விரும்பாவிட்டாலும் சார்ந்தே இருக்கே வேண்டியிருக்கிறது. ஆனால் நான் சிறுவனாயிருந்த காலத்திலிருந்து சற்றேறக்குறைய 30 ஆண்டுகளாய் இதே புலம்பல்கள் தொடர்கின்றன. காரணம் அந்நியன் படத்தில் சொன்னதுபோல "அலட்சியம்".
இது குறித்து விரிவாக அலசவிரும்பினால் தலைவலியே மிஞ்சும் என்பதால்,
இதை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரிந்த வழிமுறைகளை கூறுகிறேன்.

1. முதலில் எதாவது அரசு அலுவலம் சார்ந்த வேலைகள் வரின், முதலில் மனதினை தயார் செய்து கொள்ளுங்கள், பொறுமையாயிருப்பதற்க்கு.

2. மிகவும் புத்திசாலியான, பொறுமைவாய்ந்த, சகிப்புதன்மையுள்ள நபரை இந்த மாதிரி வேலைகளை செய்வதற்கு தேர்வு செய்யுங்கள்.

3. முடிந்தவரை தகவல்களை, சுலபமாக முடிக்கும் வழிகளை (லஞ்சம் கொடுத்து முடிக்கும் வழிகள் அல்ல, தெரிந்தவர்கள் மூலமாக etc.) தெரிந்துகொண்டு அதன்வழி முன்னேறுங்கள்.

4. காலக்கெடு ஏதும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். அரசு அலுவலகம் என்றாலே தாமதம் நிச்சயம்.

5. வைப்புநிதி மாதிரி விசயங்களில் transfer செய்யாதீர்கள். (இப்போது வட்டிவிகிதம் குறைவு சேமித்து வைக்கும் வைப்பு நிதிக்கு) அலுவலகங்கள் மாறும் பொழுது வைப்புநிதியினை கணக்கினைமுடித்து எடுத்துவிடுங்கள்.

6. முடிந்தவரை அரசு அலுவகங்கள் சம்பந்தமான வேலைகளை விரைவாக ஆரம்பித்து விரைவாக முடித்துவிடுங்கள்.     

இந்த உலகத்தினை மாற்ற விரும்பினால், மாற்றத்தினை உங்களில் இருந்து தொடங்குவதுதான் வழி, அதனால் நமது வழிமுறையை, மனமுறையை மாற்றிக் கொள்வதுதான் எளிய வழி, வலி!.                    

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔