அந்த ஒற்றைமுடி :-


கண்ணில் விழுந்த
அந்த ஒற்றைசிறு முடிதனை
வெகு நேரமாய்
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எங்கிருந்து வந்து
என் கண்ணில்
விழுந்திருக்கும் அது

காபாலத்தின் மீதிருந்தா
கண்ணின் மேலிமையிலிருந்தா
உடலெங்கும் முளைத்திருக்கும்
பூனைமுடிகளில் ஏதோவொன்றாயிருக்குமா
அக்குளின் வியர்வையால்
அலங்கரிக்கப்பட்ட முடியாயிருக்குமா

இல்லை
அந்தரங்கப் பகுதியிலிருந்து
அரிப்பின்வினை உதிர்ந்து
அயர்ந்த விழி வந்தடைந்திருக்குமா
எங்கிருந்து வந்து
என் கண்ணில்
விழுந்திருக்கும் அது

இல்லை
அது எனது முடியே இல்லையா
மகளின், மனைவியின்
தாயின், தந்தையின்
தமையனின் முடியாயிருக்குமா

இல்லை என் ரத்தம் சாராத
எவரோ ஒருவரின்
எந்தபாக முடியாகவும்
இருக்குமோ

எதற்கு எனக்குள்
இத்தனை சிந்தனை
விழுந்த முடியை
விசையுடன் ஊதித்தள்ளி விட்டு
வேறுவேலை பார்ப்பதற்கு பதில்.
  

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்