நன்றிகள் 2014 ம் ஆண்டுக்கு :-

எனது 2014 - ஒரு பார்வை இப்படியான ஆண்டின் இறுதி தினத்தில் சென்ற வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதே நினைவிலில்லை. இந்த 2014 ல் இப்படி உட்கார்ந்து திரும்பிப் பார்த்து யோசிப்பதையே கூட இந்த வருடத்தில் பெற்ற மிகப்பெரிய முதிர்ச்சியாக எண்ணுகிறேன். கவிதைகள் :- எனது கவிதைகளுக்கு இது முக்கியமான வருடம். இன்மையில் எனது கவிதைகள் வெளியானது தொடர்ச்சியாக. சில இலக்கிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களுடைய எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இந்த வருடத்தில்தான் வாய்த்தது. இலக்கின்றி கிறுக்கிக் கொண்டிருந்த என்னை கொஞ்சம் இலக்குகள் நோக்கி சிந்திக்க வைத்து எனது கவிதைகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்க்கொண்ட வருடம் 2014. அடுத்து பயணிக்க வேண்டிய பயணங்கள் குறித்த தெளிந்த சிந்தனைகளையும் விதைத்த வருடம். திரு.அபிலாஷ் அவர்களுடனான சந்திப்பும், திரு .எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பும் இந்த வருடத்தில் மற...